நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தனது தனித்துவமான படைப்பினால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். இவருடைய இயக்கத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் டீன்ஸ். இந்த படத்தில் கிருத்திகா பாலசுப்பிரமணியன், ரோஷன், ரசித்தா நாசர், தீபிஸ்வரன், ரிஷி ரத்தினவேல், அஸ்மிதா மகாதேவன் உள்ளிட்ட பல சிறுவர்கள் நடித்திருக்கின்றனர். பார்த்திபன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை அஜிரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். காவ்மிக் ஆரி இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் வெளியான முதல் நாளில், படம் வெளியானதே தெரியாதது போல் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. மூடநம்பிக்கைக்கு எதிரான கதைக்களத்தில் அடுத்த தலைமுறையினர் ரசிக்கும்படியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. மூன்று நாட்களைக் கடந்து வெற்றி நடை போடும் டீன்ஸ் படத்திற்காக ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் எமோஷனலான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
Thanks friends
For your unlimited love&support
நான் சற்றே உணர்ச்சி வசப்பட்டவன்தான்!
என் கண்ணீர் மழைத்துளிப் போலத் தூய்மையானது!
நேற்று TEENZ திரையரங்குகளில் அலைமோதிய அன்பு கண்களை கடலாக்கியது.வெளியான முதல் நாள் கூட்டமேமேயில்லை,மறுநாள்
டிக்கட்டே இல்லை.
எத்தனை screens? எவ்வளவு… pic.twitter.com/xTQM44X8lI— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 15, 2024
அந்த பதிவில், “வெளியான முதல் நாளில் படத்திற்கு கூட்டமே இல்லை. மறுநாளில் டிக்கெட்டை இல்லை. எத்தனை ஸ்கிரீன்களில் படம் திரையிடப்பட்டது. எவ்வளவு வசூல் ஆனது என்பதை நான் இதுவரை பார்க்கவில்லை. பார்க்கவும் போவதில்லை. போதும் இந்த ஆனந்த கண்ணீர். பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னை பரவசப்படுத்துகிறது. உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.