Homeசெய்திகள்சினிமாஓடிடியில் வெளியானது பார்த்திபனின் 'டீன்ஸ்'!

ஓடிடியில் வெளியானது பார்த்திபனின் ‘டீன்ஸ்’!

-

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.ஓடிடியில் வெளியானது பார்த்திபனின் 'டீன்ஸ்'!

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். இவர் தனது ஒவ்வொரு படங்களிலுமே புதுமைகளை கையாளக்கூடியவர். அந்த வகையில் பார்த்திபனை புதுமைப்பித்தன் என்றும் அழைப்பர். இவரது நடிப்பில் கடைசியாக இரவின் நிழல் எனும் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து சிறுவர்களை மையமாக வைத்து டீன்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் பார்த்திபன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் கிருத்திகா பாலசுப்பிரமணியன், ரசித்தா நாசர், ரோஷன், தீபிஷ்வரன், ரிஷி இரத்தினவேல், அஸ்மிதா மகாதேவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திரில்லர் கதைகளத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி திரையிடப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த படத்தை காண எதிர்பார்த்த ரசிகர்கள் வரவில்லை என்றாலும் நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பதாகவும் படத்தினை ரசிகர்கள், குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் எனவும் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தினை அஜிரா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. டி இமான் இதற்கு இசை அமைத்திருந்தார். காவ்மிக் ஆரி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ