நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்
ரசிகர்கள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்தடுத்து புல் ஃபார்மில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் கொடி கட்டிய நடிகை நயன்தாரா, கடந்த ஆண்டு பாலிவுட்டிலும் களம் இறங்கினார். ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு இந்தியிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயம் தமிழில் நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அன்னபூரணி. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதே சமயம் கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்துகளுக்கு எதிரானது என்றும், இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறப்ப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும், நயன்தாரா மற்றும் படக்குழு மீது மும்பையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், படத்தை நீக்கியதற்கு பிரபல மலையாள நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு ஆபத்தான முன் உதாரணம் என்றும் அவர் விமர்சித்து உள்ளார்.