Homeசெய்திகள்சினிமாமாலை அணிவித்து கொண்டாடிய பத்து தல படக்குழு!

மாலை அணிவித்து கொண்டாடிய பத்து தல படக்குழு!

-

பத்து தல படத்தின் முதல் நாள் வெற்றியை மாலை அணிவித்து கொண்டாடிய படக்குழு!

நடிகர் சிலம்பரசனின் பத்து தல திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பின், பத்து தல படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமானது.

மாலை அணிவித்து கொண்டாடிய பத்து தல படக்குழு!

நடிகர் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படத்தை உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

குறிப்பாக முதல் நாள் வசூலாக 12.3 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த முதல் நாள் வசூல் என்பது சிம்புவின் இதற்கும் முந்தைய படங்களை விட அதிகம் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மாலை அணிவித்து கொண்டாடிய பத்து தல படக்குழு!

மேலும், சிம்பு ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை விநியோகஸ்தர்கள் நடிகர் சிலம்பரசனுக்கு மாலை அணிவித்து கொண்டாடியுள்ளனர்.

MUST READ