பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் தற்போது முதல்வராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்திருந்தார்.தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் அந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. தமிழில் கூட ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் கங்கனா ரணாவத் நடித்திருந்தார். தலைவி என்ற பெயரில் இந்த படம் திரைப்படம் உருவாகி இருந்தது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் அந்தப் படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் யார் ராமதாஸின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்கள் என்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.