Homeசெய்திகள்சினிமாபவன் கல்யாண், சாய் தரம் தேஜ் கூட்டணியின் ப்ரோ...... ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் கூட்டணியின் ப்ரோ…… ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

-

கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் வினோதய சித்தம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சமுத்திரகனி தான் இயக்கி இருந்தார் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இதனை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். ப்ரோ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் பவண் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் நடித்துள்ளனர்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ப்ரோ திரைப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மை டியர் மார்க்கண்டேயா என்னும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ