Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'பேட்ட ராப்' படத்தின் புதிய பாடல்!

நாளை வெளியாகும் ‘பேட்ட ராப்’ படத்தின் புதிய பாடல்!

-

பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் புதிய பாடல் நாளை வெளியாக உள்ளது.நாளை வெளியாகும் 'பேட்ட ராப்' படத்தின் புதிய பாடல்!

நடிகர் பிரபுதேவா தற்போது விஜயின் தி கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் மூன் வாக், ஜாலியோ ஜிம்கானா, சிங்காநல்லூர் சிக்னல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரபுதேவா பேட்ட ராப் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இதில் பிரபுதேவா உடன் இணைந்து வேதிகா, விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், ரியாஸ்கான், பகவதி பெருமாள் ஆகியோரின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ் ஜே சினு இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நாளை வெளியாகும் 'பேட்ட ராப்' படத்தின் புதிய பாடல்!டி இமானின் இசையிலும் ஜித்து தாமோதரனின் ஒளிப்பதிவியிலும் இந்த படம் தயாராகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது அதிரட்டும் டும் டும் டும் டும் எனும் புதிய பாடல் நாளை (ஜூலை 05) வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ