பவித்ரா லட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர். அதே சமயம் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தார். அதைத் தொடர்ந்து இவர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருந்த நாய் சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றார் பவித்ரா லட்சுமி. அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரை பலரும் சமந்தா போல் இருக்கிறார் என கூறி வருவதுண்டு. இது தவிர பவித்ரா லட்சுமி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெடிஷன்கள் பலரும் பவித்ரா லட்சுமிக்கு என்ன ஆச்சு? ஆளே மாறிப் போய் இருக்கிறாரே! .. என்று கேள்வி எழுப்பி வந்தனர். எனவே இதைத்தொடர்ந்து பவித்ரா லக்ஷ்மி தனது “உடல்நிலை மோசமாக இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறேன்” என விளக்கம் அளித்திருந்தார். தற்போது மீண்டும் பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார் என்பது போன்ற பல தகவல்கள்
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் பவித்ரா லட்சுமி,
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என்னுடைய தோற்றம் குறித்து பலமுறை நான் விளக்கம் அளித்த நிலையிலும் விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பது எனக்கு வேதனையை தருகிறது. என்னுடைய உடலில் சீரியஸான பிரச்சனைகள் இருக்கின்றன. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன். என் வாழ்க்கையோடு யாரும் விளையாட வேண்டாம். என்னுடைய பெயரை கெடுக்கும் வகையில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- Advertisement -