spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை கௌதமி புகார்... அழகப்பன் உள்பட 6 பேர் கைது...

நடிகை கௌதமி புகார்… அழகப்பன் உள்பட 6 பேர் கைது…

-

- Advertisement -
kadalkanni
பிரபல தமிழ் நடிகை கௌதமியின் சொத்துக்களை அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

பாஜகவில் உறுப்பினராக இருந்த நடிகை கௌதமி, தனக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் உறவினர்கள் அபகரித்ததாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, குறித்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்படி, சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியையும், காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு ஆவணங்கள் இருந்த 11 அறைகளுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனிடையே தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்திருந்தனர். 6 முறை சம்மன் அனுப்பியும் அழகப்பன் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என்பதால், அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், கேரளாவில் உள்ள திரிச்சூர் மாவட்டத்தில் வைத்து அழகப்பன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்

MUST READ