Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன்-2 உலகம் முழுக்க இன்று வெளியானது!

பொன்னியின் செல்வன்-2 உலகம் முழுக்க இன்று வெளியானது!

-

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகம் முழுக்க இன்று வெளியானது!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையில், நடிகர்கள் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா,சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன்-2 உலகம் முழுக்க இன்று வெளியானது!

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் வெளியீடு தேதியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இன்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

மிகப்பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.

பொன்னியின் செல்வன்-2 உலகம் முழுக்க இன்று வெளியானது!

மேலும், 4DX தொழில்நுட்பத்திலும் EPIQ எனப்படும் மிகப்பெரிய ஸ்கிரீன் கொண்ட திரையரங்குகளிலும், IMAXள திரையிலும் வெளிவர இருக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் உள்ளதால் அதே எதிர்பார்ப்பு இந்த இரண்டாம் படத்திற்கும் எழுந்துள்ளது. காலை முதல் காட்சியாக 9 மணிக்கு தமிழகத்தில் வெளியாக உள்ளது.

மேலும், முதல் பாகத்தின் வெற்றியை போல் இரண்டாம் பாகமும் வெற்றி பெரும் என்பதைபொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ