Homeசெய்திகள்சினிமாஅடேங்கப்பா இத்தனை கோடியா... வியக்க வைக்கும் 'பொன்னியின் செல்வன் 2' முதல் நாள் வசூல்!

அடேங்கப்பா இத்தனை கோடியா… வியக்க வைக்கும் ‘பொன்னியின் செல்வன் 2’ முதல் நாள் வசூல்!

-

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளது.

படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பைப் பெற்றது. உலகெங்கிலும் சுமார் 500 கோடி வரை வசூல் செய்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இந்தப் பாகத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 18 கோடி ரூபாயும், இந்திய அளவில் 30 கோடி ரூபாயும், உலக அளவில் சுமார் 60 கோடி வரையும் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ