பொன்னியின் செல்வன் பட நடிகை ஒருவர் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இருப்பினும் இவரது இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் பா. ரஞ்சித் மற்றும் விக்ரமின் உழைப்பு பாராட்டப்பட்டது. இதற்கிடையில் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும் வருகிறார் பா. ரஞ்சித். அதே சமயம் இவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பாகவே வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார். மேலும் அசோக் செல்வன், மணிகண்டன், பகத் பாசில் போன்றோர் இந்த படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த நடிகை சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.