Homeசெய்திகள்சினிமாமாற்றுத்திறனாளியாக நடிக்கும் பூஜா ஹெக்டே?.... 'காஞ்சனா 4' பட அப்டேட்!

மாற்றுத்திறனாளியாக நடிக்கும் பூஜா ஹெக்டே?…. ‘காஞ்சனா 4’ பட அப்டேட்!

-

- Advertisement -

நடிகை பூஜா ஹெக்டே, காஞ்சனா 4 படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.மாற்றுத்திறனாளியாக நடிக்கும் பூஜா ஹெக்டே?.... 'காஞ்சனா 4' பட அப்டேட்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஏற்கனவே முனி, காஞ்சனா 1,2,3 ஆகிய படங்கள் காமெடி கலந்த ஹாரர் கதைக் களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ராகவா லாரன்ஸ், காஞ்சனா 4 எனும் திரைப்படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து நோரா ஃபதேஹி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்த படமானது சுமார் ரூ. 90 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதன்படி இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி, சென்னை போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. மேலும் கேரளாவிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது.மாற்றுத்திறனாளியாக நடிக்கும் பூஜா ஹெக்டே?.... 'காஞ்சனா 4' பட அப்டேட்! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, காது கேளாத, வாய் பேச முடியாத கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் எனவும் நோரா ஃபதேஹி ஸ்டைலிஷான பெண்ணாக நடிக்கிறார் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இத்தகவல் அறிந்த ரசிகர்கள் இது என்ன மாதிரியான கதையாக இருக்கும்? இப்பொழுதே யோசிக்க தொடங்கிவிட்டனர். இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ