Homeசெய்திகள்சினிமாஅது முழுவதும் வித்தியாசமானது..... 'கூலி' பட ஸ்பெஷல் பாடல் குறித்து பூஜா ஹெக்டே!

அது முழுவதும் வித்தியாசமானது….. ‘கூலி’ பட ஸ்பெஷல் பாடல் குறித்து பூஜா ஹெக்டே!

-

- Advertisement -

நடிகை பூஜா ஹெக்டே, கூலி படம் குறித்து பேசி உள்ளார்.அது முழுவதும் வித்தியாசமானது..... 'கூலி' பட ஸ்பெஷல் பாடல் குறித்து பூஜா ஹெக்டே!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தற்போது கூலி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நடிகர் நாகார்ஜுனா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் இந்த படமானது எல்சியு -வின் கீழ் இல்லாமல் தனி படமாக உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ஆகையினால் விரைவில் இந்த படத்தின் டீசர், பாடல் போன்ற மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூலி படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இந்த பாடல் வித்தியாசமான வைப் தரும். ‘காவாலா’ பாடலிலிருந்து இது வித்தியாசமானது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ