Homeசெய்திகள்சினிமாவரட்டா மாமே டுர்... பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா!

வரட்டா மாமே டுர்… பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா!

-

வரட்டா மாமே டுர்... பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா!சின்னத்திரையில் ஆறு சீசன்கள் வெற்றிகரமாக ஓடி தற்போது ஏழாவது சீசன் முடியும் தருவாயில் உள்ளது பிக் பாஸ் 7 நிகழ்ச்சி. பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார்? என பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முந்தைய ஒரு வாரத்தில் 8 போட்டியாளர்கள் நிலைத்து நிற்கின்றனர். இந்த வாரம் எலிமினேஷனுக்காக பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது. அதாவது போட்டியாளர்கள் எட்டு பேரில் யாராவது ஒருவர் அந்தப் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும். தொடக்கத்தில் ஒரே ஒரு லட்சம் மட்டும் பணம் பெட்டியில் வைக்கப்படும். ஏலம் நடத்துவது போல ஒவ்வொரு போட்டியாளரும் தனக்கு பணம் வேண்டாம் என நிராகரிக்க நிராகரிக்க பணத்தின் மதிப்பு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.வரட்டா மாமே டுர்... பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா!இந்நிலையில் ஒரு கட்டத்தில் பூர்ணிமா முன்வந்து 16 லட்சமாக இருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார் என்று இணையத்தில் செய்திகள் கசிந்துள்ளன. ரசிகர்கள் பலரும் பூர்ணிமாவின் இந்த முடிவு சரியானது தான் என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்னும் தொலைக்காட்சியில் அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்படவில்லை ஆனால் இணையத்தில் கசிந்த தகவல்கள் அடிப்படையில் கிட்டத்தட்ட இச்செய்தி உறுதியாகியுள்ளது. வரட்டா மாமே டுர்... பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா!ஏற்கனவே விஜய் வர்மா, பூர்ணிமா, விசித்திரா, விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் போட்டியாளர்களாக இருந்த நிலையில் தற்போது பூர்ணிமா வெளியேறியதால் மீதமுள்ள ஏழு பேர் போட்டியாளர்களாக தொடர உள்ளனர்.

MUST READ