Homeசெய்திகள்சினிமாபிரபல ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் காலமானார்

பிரபல ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் காலமானார்

-

- Advertisement -
கன்னட மற்றும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திழ்ந்த ஸ்டன்ட் இயக்குநர் ஜாலி பாஸ்டின் காலமானார்.

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜாலி பாஸ்டின், 1987-ம் ஆண்டு தனது 17 வயதில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் நடித்த பிரேமலோகா என்ற படத்தில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமானார். பல ஆண்டுகள் சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக வலம் வந்த இவர், 1995-ல் ரவிச்சந்திரன் நடிப்பில் உருவான புட்நஞ்ஜா படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் சுமார் 900 படங்களுக்கு மேல் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

மேலும், இயக்குனராகவும் வலம் வந்த இவர் தமிழில் லாக் டவுன் டைரிஸ் என்ற படத்தை இயக்கினார். ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், ரவிச்சந்திரன், சிவராஜ்குமார், உபேந்திரா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், ஜாலி பாஸ்டின் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மறைந்த ஜாலி பாஸ்டினுக்கு கன்னட திரையுலகினர் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ