Homeசெய்திகள்சினிமா'போர் தொழில்' பட இயக்குனரின் அடுத்த படம்.... வெளியான புதிய தகவல்!

‘போர் தொழில்’ பட இயக்குனரின் அடுத்த படம்…. வெளியான புதிய தகவல்!

-

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 9ம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நிகிலா விமல், சரத் பாபு
கூட்டணியில் போர் தொழில் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். சைக்கோ கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பல நாட்கள் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓடிடி யில் வெளியிடப்பட்ட இந்த படம் அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்ட இந்த படம் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றது.இந்நிலையில் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி விக்னேஷ் ராஜா இயக்க இருக்கும் புதிய படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ