இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வெளியாகி 18 நாட்களை கடந்த நிலையில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் திரைக்கதையும் வசனங்களும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் அளிக்கிறது. இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு முக்கியமான சைக்கோ திரில்லர் படமாக பேசப்படுகிறது.
அதே சமயம் கடந்த ஜூன் 16ல் வெளியான பொம்மை ,ஆதிபுருஷ் திரைப்படங்களும், அதைத்தொடர்ந்து ஜூன் 23 இல் வெளியான தலைநகரம் 2, பாயும் ஒளி நீ எனக்கு, ரெஜினா உள்ளிட்ட படங்களும் ரசிகர்களிடையே போதிய அளவில் வரவேற்பு பெறாத காரணத்தினால் போர் தொழில் திரைப்படம் இன்றுவரை பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனால் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் போர் தொழில் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் 15 நாட்களில் 5 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும் இப்படம் அமெரிக்காவிலும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி சோனி லைவ் ஓ டி டி தளத்தில் வெளியாகலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.