Homeசெய்திகள்சினிமாஅப்பாவி போலீஸ் அசோக் செல்வன், அதிகார போலீஸ் சரத்குமார்… போர் தொழில் படம் எப்படி இருக்கு!?

அப்பாவி போலீஸ் அசோக் செல்வன், அதிகார போலீஸ் சரத்குமார்… போர் தொழில் படம் எப்படி இருக்கு!?

-

‘போர் தொழில்‘ திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். இவர்களுடன் நடிகை நிகிலா விமல் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தை அப்லாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். ஜாப்ஸ் விஜய் இதற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் போன்றவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த படம் இன்று வெளியாகி உள்ளது.

க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் லோகநாதன் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமாரும், பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் அசோக் செல்வனும் காவல்துறை அதிகாரிகளாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் துவக்கத்தில் திருச்சி புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த கொலைகளை கண்டுபிடிப்பதற்காக அனுபவம் உள்ள காவல்துறை அதிகாரியான சரத்குமாருக்கு, படிப்பறிவு மேலோங்கிய அசோக் செல்வன் அசிஸ்டன்ட்டாக புதிதாக பணியில் சேருகிறார். இருவரும் இணைந்து தொடர்ந்து ஒரே மாதிரியான கொலைகளை தடயம் இல்லாமல் செய்து வரும் கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே இந்த படத்தின் கதையாகும்.


இப்படத்தில் சரத்குமாருக்கும் அசோக் செல்வனுக்கும் சிறிய முரண்பாடுகள் இருப்பதாக காட்டப்படுகிறது. அந்த வகையில் சரத்குமார் ஒரு ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் உள்ள வசனங்களும் சரத்குமாருக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது.

அடுத்ததாக அசோக் செல்வனின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இவர் மேலதிகாரியான சரத்குமாரிடம் தன் படிப்பறிவை உபயோகித்து நல்ல பெயர் வாங்க துடிப்பது போன்ற இடங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நடிகை நிகிலா விமல் அவருக்கான கதை பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த படம் துவக்கத்திலேயே சுவாரசியமான கதையுடன் தொடங்குகிறது. இந்த படத்தில் முதல் பாதியிலேயே பெரும்பாலான படங்கள் முடிந்து விட்டன என்று நினைக்கும் இப்போது இரண்டாம் பாதியில் அதைவிட சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. அதாவது தேடப்படும் கொலையாளியை கண்டுபிடித்த பிறகும் இந்த படம் விறுவிறுப்பாக செல்கிறது.

மேலும் இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் கதைக்கு பலம் அளிக்கிறது. இந்த படத்தில் தேவையற்ற சண்டை காட்சிகளோ, பாடல்களோ வசனங்களோ எதுவும் இடம்பெறவில்லை. அனைத்துமே கதைக்கு தேவையானதாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய படங்களில் கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமரா, மொபைல் ட்ராக்கிங் போன்றவைகளை உபயோகித்து இருக்கின்ற இடத்திலேயே கொலையாளியை கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இந்த படம் 2010 ம் ஆண்டு கட்டத்திலான கதை என்பதால் வித்தியாசமான கதையில் வேறுபடுத்தி காட்டி உள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

எனவே ‘போர் தொழில்’ திரைப்படம் இந்த வருடத்தில் சிறந்த கிரைம் திரில்லர் படங்களில் ஒன்றாகவும் கிரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு ஏற்றாற் போல் திருப்புமுனைகளும் சுவாரசியங்களும் நிறைந்த படமாகவும் அமைந்துள்ளது.

ராட்சசன் படத்தின் ரசிகர்கள் இந்தப் படத்தையும் போய் கண்டிப்பாக பார்க்கலாம்!

MUST READ