Homeசெய்திகள்சினிமாசரத்குமார்- அசோக் செல்வன் இணைந்து கலக்கும் ‘போர் தொழில்’… மிரட்டல் ட்ரைலர் வெளியானது!

சரத்குமார்- அசோக் செல்வன் இணைந்து கலக்கும் ‘போர் தொழில்’… மிரட்டல் ட்ரைலர் வெளியானது!

-

- Advertisement -

பிரபல நடிகர்களான சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக ‘போர் தொழில்‘ என்னும் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகை நிகிலா விமல் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜாக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. வருகின்ற ஜூன் 9ம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

ஒரு கிரைம் திரில்லர் படமான இந்த படத்தில் சரத்குமாரும் அசோக் செல்வனும், தொடர்ந்து கொடூர கொலைகளை செய்து வரும் கொலையாளியை தேடுகின்றனர். இதற்கிடையில் சரத்குமாருக்கு அசோக்செல்வனின் மீது சிறிய முரண்பாடு இருப்பதாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது.

“ஒரு ஆர்ட்டிஸ்ட் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்கணும்னா அவன் பண்ண பெயிண்டிங்க படிக்கணும்…..ஒரு கொலைகாரன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்கணும்னா அவன் பண்ண கொலைய படிக்கணும்”….என்ற சரத்குமாரின் வசனங்கள் ட்ரைலரின் கவனம் பெற்றுள்ளன.

MUST READ