Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் போர்தொழில் கூட்டணி... அசோக் செல்வனின் அடுத்த ஹிட் தயார்.... மீண்டும் இணையும் போர்தொழில் கூட்டணி… அசோக் செல்வனின் அடுத்த ஹிட் தயார்….
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் உருவான திரைப்படம் போர் தொழில். இதில் இவர்களுடன் இணைந்து சரத் பாபு மற்றும் நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். அப்பிளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
பல நாட்கள் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஓடிடி யில் வெளியிடப்பட்ட இந்த படம் அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்ட இந்த படம் தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போர்தொழில் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. அதன்படி, விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் மீண்டும் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். ஆனால், இது போர்தொழில் 2-ம் பாகமா அல்லது புது கதைக்களமா என்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெகாஹிட் கூட்டணி மீண்டும் இணைவதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.