Homeசெய்திகள்சினிமாஇந்தியில் போர் தொழில் ரீமேக்... விரைவில் அறிவிப்பு...

இந்தியில் போர் தொழில் ரீமேக்… விரைவில் அறிவிப்பு…

-

- Advertisement -
தமிழில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற போர் தொழில் திரைப்படம், தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் போர் தொழில். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் இப்படம் உருவாகியிருந்தது. இதனை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி இன்று வரை உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, உட்பட தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு முக்கியமான படமாக பேசப்படுகிறது. மேலும், அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் ஒரு மைல்கல்லமாக அமைந்தது.

இந்நிலையில் தமிழில் வெற்றி பெற்ற போர் தொழில் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், ரீமேக் குறித்து பட தயாரிப்பு குழுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

MUST READ