Homeசெய்திகள்சினிமாஅமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெறும் போஸ்ட் ப்ரோடக்ஷன்..... 'தி கோட்' பட அப்டேட்!

அமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெறும் போஸ்ட் ப்ரோடக்ஷன்….. ‘தி கோட்’ பட அப்டேட்!

-

இயக்குனர் வெங்கட் பிரபு, சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கடைசியாக இவர் கஸ்டடி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெறும் போஸ்ட் ப்ரோடக்ஷன்..... 'தி கோட்' பட அப்டேட்!இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ரஷ்யா, திருவனந்தபுரம், இலங்கை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படமானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெறும் போஸ்ட் ப்ரோடக்ஷன்..... 'தி கோட்' பட அப்டேட்!அதன்படி இந்த படமானது ஹாலிவுட் தரத்தில் தயாராகி வருகிறது. அதாவது அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகளை செய்து தந்த லோலா நிறுவனம் தான் கோட் படத்திற்கும் பணிகளை செய்து தந்துள்ளது. மேலும்  இப்படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அமெரிக்காவில் முழு வீச்சில் நடைபெறும் போஸ்ட் ப்ரோடக்ஷன்..... 'தி கோட்' பட அப்டேட்!அதே சமயம் சமீபத்தில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் இரண்டாவது பாடலும் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் லோலா நிறுவனத்தில் போஸ்ட் ப்ரோடக்ஷன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ