Homeசெய்திகள்சினிமாபிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD' ..... டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898AD’ ….. டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

-

பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898AD‘ படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD' ..... டிரெய்லர் ரிலீஸ் எப்போது?நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகி பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் இவர் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இந்த படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதேசமயம் பிரபாஸ் ராஜாசாப் போன்ற படங்களில் கமிட்டாகி வருகிறார். இதற்கிடையில் பிரபாஸ் கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD' ..... டிரெய்லர் ரிலீஸ் எப்போது? இதில் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் கதைக்களத்தில் இந்த படம் தயாராகி வருகிறது. பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD' ..... டிரெய்லர் ரிலீஸ் எப்போது?மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படமானது ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ