பிரபாஸ், கமல்ஹாசன் கூட்டணியில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் உருவாகி வருகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் முக்கியமான ஒன்றாகும். இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ப்ராஜெக்ட் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரபாஸ் இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழுவினர் எதிர்பாராத விதமாக வெளியிட்டிருந்தனர்.
𝐏𝐑𝐎𝐉𝐄𝐂𝐓-𝐊 is now #Kalki2898AD 💥
Here’s a small glimpse into our world: https://t.co/3vkH1VpZgP#Prabhas @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @Music_Santhosh @VyjayanthiFilms @Kalki2898AD
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 20, 2023
அதே சமயம் அமெரிக்காவில் நடைபெற்ற San Diego comic-con நிகழ்ச்சியில் ப்ராஜெக்ட் கே படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் What is project K? என்பதை விளக்கியுள்ளனர்.
தற்போது வெளியாகி உள்ள இந்த முன்னோட்டம் ஹாலிவுட் ரேஞ்சில் அமைக்கப்பட்டது. நடிகர் பிரபாஸ் ஒரு மிரட்டலான தோற்றத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரத்தில் காணப்படுகிறார். மேலும் இந்த படத்திற்கு கல்கி 2898AD என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படத்தில் நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால் இந்த கிளிம்ஸ் வீடியோவில் கமல்ஹாசனின் காட்சிகள் காட்டப்படவில்லை. பட குழுவினர் கமல்ஹாசனின் கதாபாத்திரத்தை மிகவும் சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்கிறார்கள் அதனால் கமல்ஹாசனின் கதாபாத்திரம் மிகப்பெரியதாகவும் மிக முக்கியமானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.