சினிமா துறையில் மிகவும் பின் தங்கியிருந்த கன்னட சினிமாவிலிருந்து புயல் போல வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்கச் செய்த திரைப்படங்கள் கே ஜி எஃப் 1மற்றும் கேஜிஎப் 2. காட்சிக்கு காட்சி மாஸ் எனக் கூறும் வகையில் மிகவும் பரபரப்பாக திரைக்கதை அமைத்து உருவாக்கப்பட்ட கே ஜி எஃப் 1 ரிலீஸ் ஆனபோது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதே சமயம் கேஜிஎப் 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.இத்தகைய பெருமைக்குரிய இயக்குனர் பிரசாந்த நீல் இந்தியாவே திரும்பி பார்க்கும் இயக்குனராக மாறினார்.
தற்போது அவர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் பிரபாஸுடன் பிரித்விராஜ், ஜெகபதிபாபு, ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை போலவே இப்படமும் ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.நடிகர் பிரபாஸின் சமீபத்திய படங்கள் பெரிதளவான வரவேற்பு பெறாத போதிலும் இந்த சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகமாகவே உள்ளது. இப்படத்தை கே ஜி எஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பலே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகவும் பிரம்மாண்டமான பான் இந்திய படமாக உருவாகும் இப்படம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டீசர் வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.