Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?

பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?

-

பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?

நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி வெளியானது. நாக் அஸ்வின் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில் பிரபாஸ், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதே சமயம் இவர், தி ராஜா சாப் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்தில் நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்'..... ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது? இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாருதி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் 2025 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இது குறித்த அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ