Homeசெய்திகள்சினிமாபான் இந்தியா நடிகருக்கு விரைவில் டும்டும்டும்... பிரபாஸின் பதிவு வைரல்...

பான் இந்தியா நடிகருக்கு விரைவில் டும்டும்டும்… பிரபாஸின் பதிவு வைரல்…

-

- Advertisement -
பான் இந்தியா நடிகர் என்று கொண்டாடப்படும் நடிகர் பிரபாஸூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டோலிவுட், கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாலிவுட் படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார் நடிகர் பிரபாஸ். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சலார் PART 1 CEASE FIRE என்ற பெயரில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து கல்கி திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார். இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளா்ர். இப்படத்திற்கு ஸ்பிரிட் என்று தலைப்பு வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நடிகர் பிரபாஸூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது வாழ்வில் மிகவும் ஸ்பெஷலான நபர் நுழைந்துள்ளதாகவும், விரைவில் நல்ல செய்தியை சொல்லவுள்ளதாகவும், அதுவரைகாத்திருங்கள் என்று அவர் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ