Homeசெய்திகள்சினிமாபிரபாஸின் 'தி ராஜா சாப்' .... நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்!

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ …. நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்!

-

பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.பிரபாஸின் 'தி ராஜா சாப்' .... நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்!

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கல்கி 2898AD திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அடுத்தது பிரபாஸ், சலார் 2, ஸ்பிரிட், பாகுபலி 3 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் ஹனுமான் படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரபாஸ், தி ராஜா சாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இந்த படத்தினை மாருதி இயக்குகிறார். இந்த படத்தினை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க தமன் இதற்கு இசை அமைக்கிறார். இதில் பிரபாஸுடன் இணைந்து மாளவிகா மோகனன், யோகி பாபு, நிதி அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.பிரபாஸின் 'தி ராஜா சாப்' .... நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்! மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை (அக்டோபர் 23) பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு
வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது புதிய போஸ்டர் அல்லது டீசர் குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ