Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

பிரபுதேவா நடிக்கும் ‘சிங்கநல்லூர் சிக்னல்’…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

பிரபுதேவா நடிக்கும் சிங்கநல்லூர் சிக்னல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!பிரபுதேவா தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பேட்ட ராப், வுல்ஃப், லைப் இஸ் பியூட்டிஃபுல், மூன் வாக் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேசமயம் விஜயின் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரபுதேவா. இந்நிலையில் பிரபுதேவா புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்தை ஜே எம் ராஜா எழுதி இயக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை முத்தமிழ் படைப்பகம் நிறுவனத்தின் சார்பில் ஏஜே பிரபாகரன் தயாரிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். பிரபுதேவா நடிக்கும் 'சிங்கநல்லூர் சிக்னல்'.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த படத்திற்கு சிங்கநல்லூர் சிக்னல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் மூலம் பிரபுதேவா டிராபிக் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ