- Advertisement -
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் பல படங்களில் நடித்த விஜய் தற்போது அவருடனே இணைந்து நடிக்கிறார்.
இதையடுத்து அவர் மேலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். டிரான்ஸ்மீடியா நிறுவனம் படத்தை வழங்குகிறது. சக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேட்ட ரேப் என்ற திரைப்படத்திலும் பிரபுதேவா நடித்து வருகிறார்.
#Prabhudeva | 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. ஆனால், பிரபுதேவா உடல்நிலை காரணமாக வரவில்லை. குழந்தைகள் பல மணிநேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சிலர் மயங்கி விழுந்தனர். இதற்கு @PDdancing விளக்கம் 👇#GOAT #Vijay #Dance pic.twitter.com/ftEntCVsPu
— ஆதிரா (@Priya_aathira) May 2, 2024