Homeசெய்திகள்சினிமாபிரபுதேவாவுடன் இணையும் மடோனா செபாஸ்டியன்... புதிய படம் அறிவிப்பு..

பிரபுதேவாவுடன் இணையும் மடோனா செபாஸ்டியன்… புதிய படம் அறிவிப்பு..

-

பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பஹீரா. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து பிரபுதேவா வுல்ஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தி நடிகர் ஹிமேஷ் ரேஷமியா நடிக்கும் ‘படாஸ் ரவிக்குமார்’ எனும் படத்தில் பிரபு தேவா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதன் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தி எக்ஸ்போஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.
இதற்கிடையே, மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மடோனா செபாஸ்டியன். இவர் விஜய் நடித்த லியோ படத்தில் அவருக்கு தங்கையாக எல்சா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மடோனா வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், பிரபுதேவாவும், மடோனா செபாஸ்டியனும் இணைந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளனர். நகைச்சுவை பாணியில் இப்படம் உருவாகவுள்ளது. சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ