Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா.... வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!

-

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா.... வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணி அளவில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மணி, விஷ்ணு, மாயா, அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் இறுதிப்போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர். எனவே இவர்களில் டைட்டில் வின்னர் யார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில், அது விஜே அர்ச்சனா தான் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. அதேசமயம் மணி ரன்னர் அப்பாக இடம் பிடித்திருக்கிறார்.

இது குறித்து விஜே அர்ச்சனாவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “விகடனில் எல்லாம் வந்திருக்கிறது உண்மையாக தான் இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் அர்ச்சனா நல்லா இரு” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதீப் ஆண்டனி ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார் என்பதும் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ