Homeசெய்திகள்சினிமா'எல்ஐகே' படக்குழுவுடன் 'டிராகன்' பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!

‘எல்ஐகே’ படக்குழுவுடன் ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன், ‘எல்ஐகே’ படக்குழுவுடன் ‘டிராகன்’ பட வெற்றியை கொண்டாடியுள்ளார்.'எல்ஐகே' படக்குழுவுடன் 'டிராகன்' பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ரவி மோகன் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரதீப் ரங்கநாதனை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் டிராகன் எனும் திரைப்படம் வெளியானது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் இப்படம் ரூ.100 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'எல்ஐகே' படக்குழுவுடன் 'டிராகன்' பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!மேலும் லவ் டுடே படத்திற்கு பிறகு டிராகன் படத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு ஹீரோ என நிரூபித்து இருக்கிறார் பிரதீப். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை நடிகர் பிரதீப் ரங்கநாதன், எல்ஐகே படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எல்ஐகே படத்தினை விக்னேஷ் சிவன் இயக்க இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கிரித்தி ஷெட்டி ஆகியோர் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ