நடிகர் பிரதீப் ரங்கநாதன் அமீர்கானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், கோமாளி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர், லவ் டுடே என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவர் தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருந்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
Life is unpredictable as i always say 🙂 Thankyou for your wonderful words #aamirkhan sir . Will cherish it for life ❤️ pic.twitter.com/HPjpJLvDN2
— Pradeep Ranganathan (@pradeeponelife) February 23, 2025
அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், பாலிவுட் நடிகர் அமீர் கானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.