Homeசெய்திகள்சினிமாபிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐசி' ..... புதிய தலைப்பை அறிவிச்சாச்சு!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்ஐசி’ ….. புதிய தலைப்பை அறிவிச்சாச்சு!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி படத்தின் புதிய தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐசி' ..... புதிய தலைப்பை அறிவிச்சாச்சு!

ஆரம்பத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் இவர் இயக்கியிருந்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் தானே இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இந்திய அளவில் பிரபலமானது. மேலும் இந்த படம் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல பெயரை புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து இவர் தொடர்ந்து பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படியே ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'எல்ஐசி' ..... புதிய தலைப்பை அறிவிச்சாச்சு!இந்த படத்திற்கு ஆரம்பத்தில் எல்ஐசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் தலைப்பிற்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே பட குழுவினர் தலைப்பை மற்ற திட்டமிட்டிருந்த நிலையில் இன்று (ஜூலை 25) பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி இந்தப் படத்திற்கு எல்ஐகே (LIK – Love Insurance Kompany)  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 11.11 மணி அளவில் எல்ஐகே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ