Homeசெய்திகள்சினிமா'டிராகன்' படத்தில் பாடல் பாடிய சிம்பு.... நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்!

‘டிராகன்’ படத்தில் பாடல் பாடிய சிம்பு…. நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்!

-

- Advertisement -

பிரதீப் ரங்கநாதன் நடிகர் சிம்புவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.'டிராகன்' படத்தில் பாடல் பாடிய சிம்பு.... நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தற்போது டிராகன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், கௌதம் மேனன், மிஸ்கின் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ரொமான்டிக் காதல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது 2025 பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அதன்படி ‘ஏன்டி விட்டுப் போன’ எனும் மூன்றாவது பாடல் நாளை (ஜனவரி 28) மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ நேற்று (ஜனவரி 26) வெளியிடப்பட்டது. இந்நிலையில் டிராகன் படத்தில் பாடல் பாடியதற்காக நடிகர் சிம்புவிற்கு பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், “வேற ஒருத்தரோட படத்துக்கு ப்ரோமோ பண்றதுனால உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது? என்ன கிடைக்கும்னு யோசிக்காமல் என்ன கொடுக்கலாம்னு யோசிக்கிறவன் மாஸ். நீங்க மாஸ் சார். இந்த பாடலை பாடியதற்கு நன்றி சிம்பு சார்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

MUST READ