பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான லவ் டுடே திரைப்படமும் இந்திய அளவில் பிரபலமானது. அதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள டிராகன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயது லோகர், மிஸ்கின், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஸ்கூல் மற்றும் காலேஜ் ஸ்டுடென்ட்டாக நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார் பிரதீப். மேலும் பல காட்சிகளில் ஃபுல் எனர்ஜியுடன் அதிரடி கிளப்புகிறார். அடுத்தது இந்த படத்தில் சினேகா, கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருப்பது போல் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.