Homeசெய்திகள்சினிமாஇந்த தலைப்பு பிரதீப் கேரக்டருக்கு பொருத்தமானது.... 'டிராகன்' படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்!

இந்த தலைப்பு பிரதீப் கேரக்டருக்கு பொருத்தமானது…. ‘டிராகன்’ படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்!

-

- Advertisement -

டிராகன் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்.இந்த தலைப்பு பிரதீப் கேரக்டருக்கு பொருத்தமானது.... 'டிராகன்' படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்!

ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம்தான் டிராகன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “டிராகன் படத்தின் டைட்டில் பிரதீப் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. மேலும் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் வேடிக்கையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் “டிராகன் படத்தின் முதல் பாதி வேற லெவல் சம்பவம்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வேறு எந்த நடிகையும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்கிற அளவிற்கு இவருடைய நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. பிரதீப்- அனுபமாவின் காட்சிகள் முதல் 30 நிமிடங்களிலும் இரண்டாம் பாதியில் ஒரு மணி நேரமும் இருக்கும். இந்த படம் அனுபமாவிற்கு பல தமிழ் பட வாய்ப்புகளை பெற்றுத் தரலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்தது அதே ரசிகர், “இந்த படத்தில் வரும் எல்லா காட்சிகளும் இந்த படத்தின் கதையும் நம் வாழ்வில் நடக்கக்கூடிய சம்பவங்களை தொடர்புப்படுத்தும். அனுபமா மற்றும் கயடு லோஹர் கதாபாத்திரம் மிக அருமையாக பொருந்துகிறது. அஸ்வத் மாரிமுத்து இந்த கதையை அற்புதமாக உருவாக்கி இருக்கிறார். இந்த படத்தில் சில கேமியோக்கள் இருக்கின்றன. பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு ஹீரோ என நிரூபித்துள்ளார்” என்று கடந்த சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

MUST READ