Homeசெய்திகள்சினிமாஇன்று நடைபெறும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை!

இன்று நடைபெறும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை!

-

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர்.இன்று நடைபெறும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை! அதைத்தொடர்ந்து லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதே சமயம் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிக்க உள்ள புதிய படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாக சொல்லப்படுகிறது. இன்று நடைபெறும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை!அடுத்தது இந்த படத்தினை இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கப் போவதாகவும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ