பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு எல் ஐ கே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அதே சமயம் டிராகன் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தினை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும்
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். அடுத்ததாக இந்த படம் 2024 நவம்பர் மாதத்தில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், டிராகன் திரைப்படத்தினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.