நடிகர் பிரகாஷ் ராஜ் ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை என்பதால் ட்விட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சிறந்த நடிகர்கள், நடிகைகள், சென்சார் பெற்ற படங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான கர்ணன், ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் சிறந்த தமிழ் படத்திற்கான விருது கடைசி விவசாயி திரைப்படத்திற்கு கிடைத்தது. இரவினில் படத்திற்காகவும் சிறந்த பாடகிக்கான விருது ஸ்ரேயா கோஷலுக்கு கிடைத்தது. வேறு தமிழ் எந்த திரைப்படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதைப்போல திரை உலக பிரபலங்களும் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வன், நானி, இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உள்ளிட்டோர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ
தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் #Jaibhim திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?#Justasking pic.twitter.com/8IZgOLKgPL— Prakash Raj (@prakashraaj) August 26, 2023
அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜும் இணைந்துள்ளார். அதன்படி தனது ட்விட்டர் பக்கத்தில், “காந்தியை கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என்று கேள்வி எழுப்பும் விதமாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.