1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். ரசிகர்கள் பலரும் இவரை டாப் ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். இன்று வரையிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் சிறிய இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் தற்போது தான் கம்பேக் கொடுத்து இருக்கிறார். அதன்படி கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரசாந்த் நடிப்பில் அந்தகன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தியாகராஜன் இயக்கியிருந்தார். கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏதோபைத்த வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அடுத்ததாக வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் கோட் படத்திலும் நடிகர் பிரசாந்த் விஜயின் நண்பனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வருடத்திற்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் பிரசாந்த். இந்நிலையில் நடிகர் பிரசாந்த், அஜித்தின் பிளாக்பஸ்டர் படம் ஒன்றில் நடிக்க இருந்ததாகவும் ஒரு சில காரணங்களால் அந்தப் படத்தை தவறவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த படம் வேறு எதுவும் இல்லை. கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் தான். இந்தப் படத்தில் அஜித், மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், தபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ராஜீவ் மேனன் இந்த படத்தை இயக்கியிருந்தார். அஜித்துக்கு பதிலாக முதலில் இந்த படத்தில் பிரசாந்த் தான் நடிக்க இருந்தார் என்று சொல்லப்படுகிறது. எனவே இத்தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த படத்தில் பிரசாந்த் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து வருகின்றனர்.