Homeசெய்திகள்சினிமாபல வருடங்களுக்குப் பிறகு இணைந்த பிரசாந்த், சிம்ரன் கூட்டணி.... 'அந்தகன்' பட விமர்சனம் இதோ!

பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த பிரசாந்த், சிம்ரன் கூட்டணி…. ‘அந்தகன்’ பட விமர்சனம் இதோ!

-

அந்தகன் பட விமர்சனம்

டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரசாந்த் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த பிரசாந்த், சிம்ரன் கூட்டணி.... 'அந்தகன்' பட விமர்சனம் இதோ!இதற்கிடையில் இவர் பல வருடங்களுக்கு முன்பாக அந்தகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கிறார். படத்தில் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படமானது ஹிந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த பிரசாந்த், சிம்ரன் கூட்டணி.... 'அந்தகன்' பட விமர்சனம் இதோ!இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தமிழிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை இன்று (ஆகஸ்ட் 9ல்) வெளியான அந்தகன் திரைப்படம் பூர்த்தி செய்ததா? என்பதை பார்க்கலாம்.

நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் பியானோ ஆர்டிஸ்ட்டாக நடித்திருக்கிறார். அதேசமயம் பிரசாந்துக்கு பிரியா ஆனந்தின் நட்பு கிடைக்கிறது. எனவே பிரியா ஆனந்தின் உதவியுடன் அவருடைய பாரில் வேலை செய்கிறார் பிரசாந்த். அப்போது நடிகர் கார்த்திக் பிரசாந்துக்கு அறிமுகமாகிறார். பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த பிரசாந்த், சிம்ரன் கூட்டணி.... 'அந்தகன்' பட விமர்சனம் இதோ!அவருடைய மனைவி சிம்ரனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என பிரசாந்தை பியானோ வாசிப்பதற்காக வீட்டிற்கு அழைக்கிறார். கார்த்திக் சொன்னபடி பிரசாந்த், சிம்ரன் வீட்டுக்கு வர அங்கு கார்த்தி இறந்து கிடக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரசியமான கதையின் மூலம் நகர்த்தியுள்ளனர். இந்தி மொழியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன் படம் என்பதால் கதையானது பாண்டிச்சேரியில் நடப்பது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசாந்த் அவருடைய நடிப்பை மிகவும் நேர்த்தியாக தந்துள்ளார். ஆகவே தரமான கம்பேக் கொடுத்துள்ளார் பிரசாந்த். படத்தில் நடக்கும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கிறது. பிரசாந்த் எப்படி தனது ரோலில் அசால்ட் செய்துள்ளாரோ அதேபோல் சிம்ரனும் தனது நடிப்பினால் மிரட்டியுள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த பிரசாந்த், சிம்ரன் கூட்டணி.... 'அந்தகன்' பட விமர்சனம் இதோ!மேலும் கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் தனக்கான சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர். இருப்பினும் படத்தின் ஆரம்பம் சற்று ஸ்லோவாக சென்றாலும் கார்த்திக் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு படமானது வேகம் எடுக்கிறது. அடுத்ததாக படத்தின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்தி மொழியில் இந்த படத்தை பார்க்காதவர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக இருக்கும்.

MUST READ