Homeசெய்திகள்சினிமாதரமான கம்பேக் கொடுத்த பிரசாந்த்.... 'அந்தகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

தரமான கம்பேக் கொடுத்த பிரசாந்த்…. ‘அந்தகன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

-

- Advertisement -

தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் அந்தகன். இந்த படத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தரமான கம்பேக் கொடுத்த பிரசாந்த்.... 'அந்தகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இந்த படமானது இந்தி மொழியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் இந்தி மொழியில் வெளியான போதே விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டய கிளப்பியது. எனவே தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 9) இந்த படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. தரமான கம்பேக் கொடுத்த பிரசாந்த்.... 'அந்தகன்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?அதே சமயம் நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். நடிகை சிம்ரன் படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார். இந்நிலையில் இந்த படமானது வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ. 65 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களிலும் ஏற்படும் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ