Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் பிரசாந்தின் 'வின்னர் 2' .... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரசாந்தின் ‘வின்னர் 2’ …. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

விரைவில் வின்னர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரசாந்தின் 'வின்னர் 2' .... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த 2003 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வின்னர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர். சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதிலும் பிரசாந்த்- வடிவேலு காம்பினேஷனில் இடம்பெற்ற காமெடிகள் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேசமயம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் விரைவில் வின்னர் 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரசாந்தின் 'வின்னர் 2' .... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதாவது கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் நடிகர் பிரசாந்த்தும் பேட்டி ஒன்றில் பின்னர் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என அப்டேட் கொடுத்திருந்தார். இதன் மூலம் வின்னர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. எனவே நடிகர் பிரசாந்த், அந்தகன் படத்திற்கு பிறகு வின்னர் 2 படத்தில் நடிப்பார் எனவும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளிவரும் எனவும் நம்பப்படுகிறது.

MUST READ