பிரேமலதா விஜயகாந்த், இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அந்த வகையில் இவர் கடந்த 1976 இல் வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆயிரத்திற்கும் மேலான படங்களில் 7000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. மேலும் இவர் சமீபத்தில் வேலியன்ட் என்ற தலைப்பில் லண்டனுக்கு சென்று தன்னுடைய முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். அதாவது 35 நாட்களில் எழுதிய சிம்பொனி இசையை இளையராஜா 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்தார். ரசிகர்களும் இளையராஜாவின் சிம்பொனி இசையை மிகுந்த உற்சாகத்துடன் மெய்மறந்து கண்டுகளித்தனர்.
அதைத்தொடர்ந்து லண்டனிலிருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு இளையராஜாவுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த இசைஞானி இளையராஜாவை, 82 வயதிலும் மகத்தான சாதனை படைத்துள்ளார் என பலரும் இளையராஜாவை புகழ்ந்து வருவதோடு திரைப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.