பிரேமலு 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக வெளியாகும் மலையாள திரைப்படங்கள் பல தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கிரிஷ் இயக்கியிருந்தார். இதில் நஸ்லேன், மமிதா பைஜு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அழகான காதல் கதையை மையப்படுத்தி வெளியான இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓடிடி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரேமலு 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் இயக்குனர் கிரிஷ், பிரேமலு முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ஜாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே பிரேமலு 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாகியுள்ளது. மேலும் பிரேமலு 2 படத்தின் அறிவிப்பு போஸ்டரில் இந்த படம் 2025 இல் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.