திரைத்துறையில் பிரம்மாண்டமான செட்டுகளையோ ஆக்ஷன் காட்சிகளையோ நம்பாமல் பார்வையாளர்களை மட்டும் சார்ந்து இருக்கும் படியான கதைகளை கொடுத்து வியக்க வைக்கின்றனர் பல மலையாள இயக்குனர்கள். சமீபகாலமாக வெளியாகும் மலையாள திரைப்படங்கள் தமிழ் படங்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறது. லூசிபர், 2018, காதல் தி கோர், பிரம்மயுகம் போன்ற படங்கள் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டிலும் சக்க போடு போட்டு வருகிறது. அதே சமயம் பிரேமலு திரைப்படமும் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை கிரிஷ் என்பவர் இயக்கி இருந்தார். இதில் நஸ்லேன், மமீதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் தற்போது 100 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இனிவரும் நாட்களிலும் இந்த படம் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் அடுத்ததாக தமிழிலும் தப் செய்யப்பட்டு வருகின்ற மார்ச் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -