Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்!

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்!சிவகார்த்திகேயனின் 21 வது படமான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படமானது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்து வரதராஜனை கௌரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் இந்த படத்தில் முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் 20 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்புகள் மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தில் இணைந்த பிரேமலு பட நடிகர்! இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் சமீபத்தில் வெளியாகி சக்க போடு போடும் மலையாளத் திரைப்படமான பிரேமலு பட புகழ் ஷியாம் மோகன் அமரன் படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ